Saturday, January 3, 2009

puthu kavithai

வேகம் பிடித்தோடும் பேருந்துகள்
சக்கரம் மாட்டிய தொட்டில்
காதலோ கருமமோ
தூங்காதவர்களை கட்டாயம் எதேனும்
நோய் பிடித்திருக்கலாம்
சூரியக்கீற்று எழு எத்தனிக்கும்
வேளையில் ஊர் தாண்டி வந்துவிட்டதாய்
புலம்பி எழுகிறார் முன்னிருக்கை பயணி
தூக்கும் கலைந்துவிட்ட வெறுப்பில்
அவரை திட்டி வைத்தேன்
அவர் எப்போது இறங்கினார் என்று
தெரியாத தூக்கம் கலைந்த போது
என்னூரும் தாண்டியிருந்தது
அடுத்த ஊரில் இறங்க வேண்டிய
பின்னிருக்கை பயணி
இப்போது என்னை சபித்துக்கொண்டிருக்கிறார்
***
-- பிரேம்குமார் சண்முகமணிவலைப்பூ : http://premkumarpec.blogspot.comஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு